இலங்கையில் மொழி தொடர்பான அடிப்படைச் சட்டமானது 1978 இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ivஆவது அத்தியாயத்தில் காட்டப்பட்டுள்ளது. அதிலுள்ள ஏற்பாடுகள் 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினாலும் (1987) 16 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினாலும் (1988) திருத்தம் செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசியலமைப்பின் iiiஆவது அத்தியாயத்தில் 12(2)ஆவது உறுப்புரையில் மொழி உரிமையானது அடிப்படை உரிமையாகக் காட்டப்பட்டுள்ளது.