அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பாளராகத் தொழிற்படுகின்ற அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மொழிபெயர்ப்புப் பிரிவு பின்வரும் சேவைகளை வழங்குகிறது:

  • அரசாங்க மற்றும் பகுதியளவிலான அரசாங்க நிறுவனங்களுக்கு சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு வசதிகளை வழங்குதல். (இச் சேவைக்காக அரசாங்க நிறுவனங்களிடமிருந்து கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது என்பதுடன் பகுதியளவிலான அரசாங்க நிறுவனங்களிடமிருந்து பொது நிருவாக சுற்றறிக்கை இல. 12/2003(iv) இன் பிரகாரம் கட்டணங்கள் அறவிடப்படும்).
  • தனது மொழிபெயர்ப்புத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு இத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள bhashawa.lk எனும் இணையதளத்தினூடாக தகைமை வாய்ந்த மொழி வசதிப்படுத்துநர்களைத் தெரிவு செய்வதற்கு ஏதேனும் தனிநபரை/நிறுவனத்தை வசதிப்படுத்துதல். (பொது நிருவாக சுற்றறிக்கை இல. 26/2016 இல் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் கட்டணங்கள் செலுத்தப்படல் வேண்டும்)
  • இத் திணைக்களத்தினால் தாபிக்கப்பட்ட வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்புச் சேவைகளை வழங்குவதில் தகைமை பெற்ற தனிநபர்களை உள்ளடக்கிய வெளிநாட்டு மொழி வளவாளர் குழாம் ஊடாக சீன, பிரஞ்சு, ஜேர்மன், ஹிந்தி மற்றும் ஜப்பான் மொழிகளில் மொழிபெயர்ப்புத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு தனிநபரை/நிறுவனத்தை வசதிப்படுத்துதல்.
  • மொழிபெயர்ப்புக் கற்கையில் கல்வி பயிலும் பட்டதாரிகளுக்கு “செயன்முறை ரீதியான மொழிபெயர்ப்பு” தொடர்பான பயிற்சியினை வழங்குதல்.

அரசாங்க மற்றும் பகுதியளவிலான அரசாங்க நிறுவனங்கள் அஞ்சல், மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ மொழிபெயர்ப்புக்கான தமது வேண்டுகோளைச் சமர்ப்பிக்கலாம். மொழிபெயர்ப்பிற்கான தங்களது வேண்டுகோள் தொடர்பாக, மேலதிக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக தங்களது நிறுவனத்தின் உத்தியோகத்தர் ஒருவரின் பெயர் மற்றும் தொடர்பு இலக்கத்தினை வேண்டுகோளுடன் தயவுசெய்து வழங்கவும்.

அரசகரும மொழிகள் ஆணையாளர் (மொழிபெயர்ப்பு)
அரசகரும மொழிகள் திணைக்களம்,
இல.341/7,
கோட்டை வீதி, ராஜகிரிய
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
011- 2877231

பிரிவுத் தலைவர்

திரு. ஷமிந்த மஹலேகம்
ஆணையாளர் (மொழிபெயர்ப்பு)

011 – 2877231

071 – 8004843

ஏனைய உத்தியோகத்தர்கள்

திருமதி. வஜிரா லசந்தி
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்

திருமதி. செவ்வந்தி ஜயவீர
அபிவிருத்தி உத்தியோகத்தர்

செல்வி. சந்தனி யாப்பா
அபிவிருத்தி உத்தியோகத்தர்