சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு “மொழிப்பெயர்ப்பும் சுதேசமொழிகளும்” எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 15 வயது மற்றும் 25 வயதிற்குட்பட்ட பாடசாலை மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவ மாணவியருக்கான திறந்த சுவரொட்டிப் போட்டியை நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 1. பங்கு பற்றுவதற்கான தகைமைகள்
  வகை (1) – 15 வயதிற்கும் 18 வயதிற்குமிடைப்பட்ட அரச மற்றும் பிரிவெனா பாடசாலை மாணவ மாணவியர்.
  வகை (11) – 18 வயதிற்கும் 25 வயதிற்குமிடைப்பட்ட உயர்கல்வி நிறுவன மாணவ மாணவியர்.
 2. கருப்பொருள்
  “மொழிப்பெயர்ப்பும் சுதேசமொழிகளும்”
 3. சுவரொட்டியின் அளவு : 18” x 11”
 4. வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பணப்பரிசும் சான்றிதல்களும்
  வழங்கப்படும்.
 5. போட்டிக்கான நிபந்தனைகள் :
  • இலங்கையின் பாடசாலை மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவ மாணவியர் மட்டும் போட்டியில் பங்குபற்ற முடியும். அரசகருமமொழிகள் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் இப்போட்டியில் பங்குபற்ற முடியாது.
  • சுவரொட்டிகளுக்கு நீர் வர்ணம், பெஸ்ரல் வர்ணம் (pestel), வண்ணப்பூச்சுகள் மற்றும் எண்ணெய் பூச்சுக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படும்.
  • அனைத்துப் போட்டியாளர்களும் கீழே தரப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து அதனை சுவரொட்டியின் பின்பக்கத்தில் ஒட்டுதல் வேண்டும்.
  • போட்டியில் பங்கு பற்றும் பாடசாலை மாணவர்கள் தமது ஆக்கத்தை பாடசாலை அதிபரின் மூலமாகவும் உயர்கல்வி நிறுவன மாணவர்கள், பிரிவெனா மாணவர்கள் தமது ஆக்கத்தை நிறுவனத் தலைவர் மூலமாகவும் உறுதிப்படுத்தல் வேண்டும்.
  • ஆக்கங்கள் அனுப்பப்படும் கடித உறையின் மேல்பக்க இடது மூலையில் “சர்வதேச மொழிபெயர்ப்பு தின சுவரொட்டிப் போட்டி – 2019” மற்றும் வகை என்பவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும்.
  • விண்ணப்பதாரி ஒருவர் ஒரேயொரு ஆக்கத்தை மட்டுமே அனுப்பலாம்.
  • போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட சுவரொட்டி மீள ஒப்படைக்கப்படமாட்டாது.
  • வெற்றியீட்டிய போட்டியாளர்களது சுவரொட்டிகளை, அரசகரும மொழிகள் திணைக்களம் தனது ஊடக, பிரச்சார மற்றும் கல்விசார் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு போட்டியாளர்கள் தமது பூரண சம்மதத்தை அரசகரும மொழிகள் திணைக்களத்திற்கு தெரிவித்தல் வேண்டும்.
  • போட்டிக்கு அனுப்பப்படும் ஆக்கங்களில் ஏதாவது சேதங்கள்,இழப்புகள் அல்லது காலதாமதம் போன்றனவற்றுக்கு அரசகரும மொழிகள் திணைக்களம் ஒருபோதும் பொறுப்பேற்கமாட்டாது.
  • போட்டிக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்றாத மற்றும் பூரணப்படுத்தப்படாத அல்லது காலதாமதமாக அனுப்பப்படும் சுவரொட்டிகள் அனைத்தும் நிராகரிக்கப்படும்
  • நடுவர்குழுவின் தீர்ப்பே இறுதி தீர்ப்பாகும்.
 6. சுவரொட்டிகளை சமர்ப்பித்தல் : 
  • போட்டிக்கான இறுதித் திகதி 31.08.2019.
  • விண்ணப்பப் படிவங்களை நேரடியாவோ அல்லது தபால் மூலமாவோ “அரசகரும மொழிகள் ஆணையாளர் நாயகம்,அரசகரும மொழிகள் திணைக்களம், இல 341/7 கோட்டே வீதி இராஜகிரிய” , எனும் முகவரிக்கு இறுதித் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பிவைத்தல் வேண்டும்.
  • இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.languagedept.gov.lk எனும் இணையதள முகவரியுடன் அல்லது 0112861075 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்க.

Download Application : Click here