சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளிலும், பிற வெளிநாட்டு மொழிகளிலும் மாணவர்கள் தேர்ச்சியைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு மொழி ஆய்வு கூடத்தில் மொழிப் பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. மொழிக் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை அதிக செயற்திறன் மிக்கதாக செயற்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும்.
மொழி ஆய்வு கூடத்தினால் நடாத்தப்படும் பாடநெறிகள் யாவை?
மொழிப் பாடநெறிகள்
|
|
சிறந்த பயிற்சியைப் பெற்ற மொழி போதனாசிரியர்களினால் அனைத்துப் பாடநெறிகளும் நடாத்தப்படுகின்றன.
சிங்கள மற்றும் தமிழ் மொழிகளை கற்பித்தல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படுவதோடு இரண்டாம் மொழியாக, மொழியைப் பயிலும் மாணவர்களுக்காக மாத்திரமே இப் பாடநெறி திட்டமிடப்பட்டுள்ளது.
இப் பாடநெறிகள் யாருக்கானவை?
- அரச உத்தியோகத்தர்கள்
- அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனம்சார் உத்தியோகத்தர்கள்
- தனியார்துறை உத்தியோகத்தர்கள்
- க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்தோர்
- மொழி ஆர்வலர்கள்
பாடநெறிக்கு பதிவு செய்வது எவ்வாறு?
தவணை ரீதியில் மொழிப் பாடநெறிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். பத்திரிகை விளம்பரத்திற்கமைய நேர்முகப் பரீட்சை மூலம் பாடநெறிக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வின் போது பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்
- கணனிமயப்படுத்திய சுயவிபரக் கோவை
- உயர் கல்வி அல்லது தொழிற் தகைமைக்கான சான்றிதழின் பிரதியொன்று
- வர்ணப் புகைப் படமொன்று
உரிய பாடநெறிக் கட்டணத்தை செலுத்தியதன் பின்னரே பதிவு செய்யப்படும்.
பாடநெறிக் கால எல்லை யாது?
வார நாட்களில் மாத்திரம் 02 மணித்தியாலங்கள் வீதம் 48 மணித்தியாலங்கள் (06 மாதங்கள்)
பாடநெறிக் கட்டணம் எவ்வளவு?
அடிப்படை பாடநெறி | உயர் பாடநெறி | விசேட பேச்சுப் பயிற்சிப் பாடநெறி |
ரூ. 7500. 00 | ரூ. 8000. 00 | ரூ. 7500. 00 |
பாடநெறியின் இறுதியில்………..?
- இப் பாடநெறிகள் குறுகிய கால துரித பயிற்சிப் பாடநெறிகளாவதோடு பேச்சு மொழிக்கு முதன்மைத் தருவதே இவற்றின் முக்கிய குறிக்கோளாகும். சொல்திறம், பேச்சு நடை, சரியான உச்சரிப்பை பயிற்றுவித்தல் மற்றும் செயற்பாட்டு இலக்கணம் (Functional grammar) குறித்த அறிவை வழங்கல் முதலியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
- மொழிப் பாடநெறிகளின் இறுதியில் நடாத்தப்படும் வாய்மொழி மூல மற்றும் எழுத்துப் பரீட்சைகளில் சித்தி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.