இந் நாட்களில் இணையத்தளம் இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை தயவுடன் கவனத்திற்கொள்ளவும்.

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்ட மேற்படி பரீட்சையை, 2026.03.10, 11, 12 ஆம் திகதிகளில் நுகேகொட, நாவலை, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இப் பரீட்சையுடன் தொடர்புடையதாக 2025.11.27 ஆம் திகதி நடைபெற்ற தமிழ் மொழி வினாத்தாளும், தமிழ் மொழிபெயர்ப்பு வினாத்தாளும் இரத்துச் செய்யப்படுகின்றன. அதற்கமைய, அன்றைய தினம் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரிகள் மீண்டும் அதே பாடங்களுக்குத் தோற்றுதல் வேண்டும்.

இப் பரீட்சைக்குரிய பரீட்சை அனுமதியட்டைகளை, 2026.02.16 ஆம் திகதியிலிருந்து தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இல.: 011-2889506

அரசகரும மொழிகள் ஆணையாளர் நாயகம்